Friday, February 15, 2013

ஆரோக்கிய சமுதாயமும் அக்கா கனிமொழியும் . . .

யாராவது வந்து நம்மளை தொ.கா. ல நேரடி ஒளிபரப்பு விவாத நிகழ்ச்சிக்கு கூப்பிட்டா என்ன செய்யனும்?

தலைப்பு என்ன? (காதலர் தினம் கலாச்சார சீரழிவா?)

தலைப்பை நாம ஆதரச்சு பேசப் போறோமா? இல்லை எதிர்க்ப் போரோமா? (ஆதரித்து)

யாரெல்லாம் பேச வராங்க? (கனிமொழி, அர்ஜுன் சம்பத், பாமாக வக்கீல், பெண் சமூக ஆர்வளர், அப்பறம் ஒரு பொறம்போக்கு!)

ஒரு பேச்சாளனுக்கு மகளாப் பொறந்ததால நாம எங்க வேணா, எப்படி வேணா பேசலாம்-னு நெனச்சு பேசினா இப்படி மானங்கெட்டுத்தான் வரனும்.

"பெரியதனக் காக்கா பீ திங்கப் போச்சா எறகெல்லாம் பீயாச்சாம்" - சின்ன வயசில மெத்தப்படிச்ச மேதாவி கணக்கா ஏதாவது செஞ்சு பல்பு வாங்கினா எங்க பாட்டி இப்படித்தான் திட்டுவாங்க.

அதே கணக்கா நேத்து கனிமொழி தொ.கா.ல வந்து நாறிப்போனாங்க .

காதலுக்கு நாங்க தான் காவக்காரங்க?

சாதி ஒழியனும்னா காதல் செய்வீர்? சுயமரியாதை மணம் புரிவீர்!

18 வயசானவங்களை காதலிக்க கூடாதுனு சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது?

அப்பிடி இப்பிடின்னு என்னா ஒரு அலப்பரை.

யாறாவது இந்தக்கேள்விய கனியப்பாத்து கேக்க மாட்டாங்களான்னு ஏங்கிடிருந்தேன்!

நிகழச்சி முடியப்போறப்ப நம்ம வக்கீலு கேட்டாருயா அந்தக் கேள்விய! செருப்பால அடிச்சமாதிரி....

இந்தமாதிரி எத்தனை வாங்கிருக்கோம்; அரசியல்ல இதெல்லா சாதாரணபப்பா ன்னு எந்திரிச்சு போய்டாங்க

அவங்க அப்பா, நம்ம முன்னால்!
 
ஹிந்தி படிக்காதீங்கனு சொல்லி நம்மளை வடக்க தலைவச்சு படுக்க உடுல

அப்புறமா திராவிடத்தை காப்போம்! ஜாதியை ஒழிப்போம்! னு கொள்கைய முழங்கி, யாரையோ எதிர்க்கிறதுக்கு, தாழ்தப்பட்டடவர்களை உயர்த்தப்போவாதாக கடந்த 40 ஆண்டுகளாக முயற்சி செய்துகொண்டே இருக்கிறாரு.

இப்ப அவரோட தவப் புதல்வி சுயமரியாதை திருமணம் மட்டும்தான் ஆரோக்கிய சமுதாயத்தை அமைக்கும்-னு கூவறாங்க.

சமுதாயம்னா என்ன? பலதரப்பட்ட மக்களும் ஒத்துமையா இருக்கிறது தான் சமுதாயம்.

கலாச்சாரம்னா? ஒருவனுக்கு ஒருத்தி னு வாழ்றது நம்ம கலாச்சாரம்.

ஒருவனுக்கு ஒருத்தினு பலதரப்பட்ட மக்களும் ஒத்துமையா இருக்கிறது தானே ஆரோக்கியமான சமுதாயம்?

இப்ப நாம அப்படித்தானே இருக்கோம்.

அப்ப கனி என்ன சொல்ல வருது? யாறாவது தெரிஞ்சா சொல்லுங்களேன்.

கரகாட்டக்காரன் படத்தில கவுண்டரப்பாத்து செந்தில் கேட்ட கேள்விய கொஞ்சம் நாகரீகமா கேட்டாரு பமக வக்கீல்.