Friday, February 1, 2013

ஆழ்ந்த அனுதாபங்கள்


விஸ்வரூபம் பிரச்சனைல மூஸ்லீம்கள் அவங்க மதத்தை இழிவாக காட்டியதத் தாங்கமுடியாம பொங்கிட்டாங்கன்னு நானும் பதிலுக்கு பொங்கிட்டேன். அது ரொம்பத் தப்புனு இப்ப புரிஞ்சுக்கிட்டேன். தன்னோட சுய லாபத்துக்காக அவங்களை பலிகடாவாக்கி நம்மளை கோமாளியாக்க திட்டம் போட்டிருக்காங்க. நல்ல வேளை அவுங்க மாட்டிட்டாங்க நாம முழிச்சுக்கனும்.

தமிழ்நாட்டல இப்ப பாலாறும் தேனாறும் பாய்ந்து, மக்கள் யாவறும் சுபிட்சாமாக இருப்பதால வரப்போர நாடளுமன்றத் தேர்தல்ல 40 இடங்கள்ல ஒன்னக்கூட,  ம்ம் பிரச்சாரத்துக்கு தெருவில கூட இறங்கமுடியாத நெலம.

மத்திய அரசும் தன் பங்கிற்கு மக்களை சுபிட்சமாக வாழவைக்க கடுமையாக போரடிக்கொண்டிருப்பதாலும் அதற்க்கு உறுதுணையாக அன்னையின் மகனையும் களத்தில் நிறுத்தியிருப்தாலும், பா.ஜ.க. வின் பிரதம வேட்பாளருக்கு இந்தமுறை வாய்ப்பு பிரகாசமாக இருப்பதை அறிந்து, பதவியேற்ப்பு விழாவிற்கு நேர்ல போய் வாழ்த்திட்டு கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாங்க.

கூட்டணி முடிவானாக்கூட ஓட்டு வாங்க என்ன செய்ய? 40ல ஒரு 35 ஆவது கெடைச்சாத்தான் ஒரு 3 வருசத்துக்கு இந்த கோர்ட்டு கேஸு  ன்னு அழைய வேண்டியதில்ல. நிம்மதியா நாட்ல ஓய்வெடுக்கலாம்.  அய்யா இந்த வாட்டி தனியா நின்னாக்கூட 30 எடத்தை புடிச்சிடுவாறு. என்ன செய்யலாம்?  அப்பத்தான் நம்ம உலக நாயகன் முஸ்லீம் அமைப்புகளுக்கு நல்லெண்ண அடிப்படைல விஸ்வரூபத்தை காட்ட

அதோட, புத்தக வெளியீட்டு விழாவில தலமைக்கு ரொம்ப வேண்டியவரை வருங்கால பிரதம மந்திரி னு எதார்த்தமா சொல்லி, படத்தையும் தரமாட்டேன், "இது என்னோட பொருள் நா யாருக்கு வேண்டுமானாலும் விற்பேன்னு" பேசி கடுப்பேத்த

விஸ்வரூப்தை வெளியிடுவதற்க்கு சில மணிநேரத்திற்கு முன்,  படத்தை வெளியிட்டால் முஸ்லீம்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறையும் என்பதால் இரவோடிரவாக அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் படத்திற்கு 144 தடை விதிக்க உத்தரவிட்டார் . பலியை முஸ்லீம்கள் மீது போட்டார்.

முஸ்லீம் அமைப்புத் தலைவர்கள் எல்லாம் ஒண்ணுகூடி, எங்க மத்தை கேவலப்படுத்திற வகையில இந்தப்படம் இருக்குனு சொல்ல, உயர்நீதி மன்ற நீதிபதி படத்தைப் பாரத்துட்டு, அப்படியெல்லாம் இல்லை, படத்தை வெளியடத் தடையில்லைனு சொல்ல

இதோட விட்டிருந்தா முஸ்லீம் அமைப்புகள் தான் பிரச்சனை செஞ்சாங்க. அரசாங்கம் தன் கடமையத்தான் செஞ்சுதுனு சொல்லி, நாடாளுமன்ற தேர்தல்ல பா.ஜ.க. வோட கூட்டணி அமைச்சு அநேகமா அனைத்து தொகுதியையும் ஜெயிச்சிருக்களாம்.

எப்படி?

சிறுபான்மையின அமைப்புகளெல்லாம் ஒன்னா சேந்து, உலக அளவில புகழ் பெற்ற கமலோட படத்தை, அவரோட சொந்த மாநிலத்திலயே எங்களால தடை செய்ய முடியும்; இந்தியால 20 கோடிப் பேர் இருக்கிறோம்; உலக அளவில 5 பேருக்கு 1 முஸ்லீம் இருக்கிறோம்; நானும் 15000 ஓட்டு வித்தியாசத்தில வெற்றிபெற்றிருக்கிறேனு மார்தட்டி நிக்கறாங்களே ஏன்?

ஏன்னா சிறுபான்மையின மக்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு, அவங்களை முன்னேற்றுவது  எங்களது கடமை, என்று சொல்லிப் பெரும்பாலான ஓட்டுப் பொறுக்கிகள் அவர்களை அரசியல் ஆதாயத்திற்காக மட்டும் பயன்படுத்திட்டு, இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு அதனால பெரும்பான்மையிருக்கு ஆதரவா செயல்படற கட்சிய மதவாத கட்சினு சொல்லி வளரவிடாம செஞ்ட்டாங்க.

அவங்க அதிகாரத்தில இருந்திருந்தா இவ்வளவு பிரச்சனை ஆயிருக்குமா? அதனால வரப்போர தேர்தல்ல அவங்களை ஏன் ஆதரிக்கக் கூடாதுன்னு நான் நினைச்ச மாதிரி ஒரு 20% மக்களாவது நினைச்சிறுப்பாங்கள்ள? அப்ப 20+20 = 40!

ஆனா, அரசு தரப்பு வழக்கறிஞர் வாங்கின காசுக்கு அதிகமா விசுவாசத்தைக் காட்ட, தூங்கிட்டிருந்த நீதிபதிய தட்டி எழுப்பி மீண்டும் தடைவிதிக்கச் சொல்லி

இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சு; இது தனிப்பட்ட விரோதம் இல்லை! அம்மா யாரையும் பழிவாங்க மாட்டாங்க! அவங்களுக்கு சம்மந்தமே இல்லாத, அவங்களே பார்க்காத தொ.கா. க்காக இந்தமாதிரி கீழ்தரமான வேலையெல்லாம் செய்ய மாட்டாங்க! இது முழுக்க முழுக்க தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவே!

ஆக நோகாம நொங்கு திங்கிறது அய்யா தான்.

இது தெரியாம இஸ்லாமிய சகோதரர்கள், நாம எதையெல்லாம் மறந்திருந்தமோ அதையெல்லாம் மறுபடியும் சொரிஞ்சு விட்ருக்காங்க பரவால.  நாங்க மனிதனை சக மனிதனாக மதிக்கத் தெரிந்தவர்கள். ஆனால் எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. இனிமேலாவது சிறுபான்மை சமூகத்தை முன்னேற்றப் பாடுபடுங்கள்.

இதுல காமெடி என்னனா, ஒரு இஸ்லாம் சகோதரர் நேரடி ஒளிபரப்பில, இன்னொரு அமைப்புத்த தலைவருடைய கருத்துக்கும் எங்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை! அவர் எங்கள் தலைவரிடம் சொல்லமல் வந்துவிட்டார்! அடடா இந்த அமைத்தலைவர்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி.

நிகழ்சியில பேசிய ஒரு பட்டிக்காட்டான் தாசாவதாரம் படத்தை மோசமாக விமர்சித்தார். நாகேஷ் குடும்பத்தில் அதிக வயசு வித்தியாசத்தில் உறுப்பினர்கள் இருப்பதாக கமல் காட்டியிறுப்பார். அது அவர்களை இழிவுபடுத்துவதாக சொன்னார்.

1999 ல், நாங்கள் இருந்த வீட்டறுகே ஒரு முஸ்லீம் குடும்பம் இருந்தது. அந்த வீட்டிலிருந்த சிறுவன் மட்டும் எங்களிடம் பேசுவான். அவர்கள் வீட்டில் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் ஒரு வயதான தம்பதியரும் இருந்தனர்.

அந்த வயதானவரை சிலநாட்கள் காணாததால், நான் அவங்கிட்ட எங்கப்பா உங்க தாத்தாவை ரெண்டு நாளாக் காணோம்? னு கேட்டேன். எனக்குத் தாத்தா யாறும் கிடையாதுன்னு சொன்னான். அதற்குள் என் நண்பன் என்னை தனியே கூப்பிட்டு என்ன ஜீ இப்படிக் கேட்டுட்டீங்க அது அவங்க அப்பா!; அதுமட்டுமில்ல அவங்க அம்மா இப்ப 8 மாசம்னு சொன்னான்.  எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு.

அதத்தான் தசாவதாரம் படத்தில கமல் காட்டியிறுப்பார். இதுல புண்பட என்ன இருக்கிறது. எங்க தாத்தாவுக்கு 5 பசங்க 2 பொண்ணுங்க. ஆனா இந்தளவு வயசு வித்தியாசம் கிடையாது.

முடிவாக ஒருவார கூத்துக்கு மீசையச் செரச்ச எல்லோருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

No comments:

Post a Comment